எல்லையில் முட்டி மோதி உரசல்.. முடிவுக்கு வருமா பங்காளி சண்டை.. ஒரு முடியவில் இந்தியா, சீனா

x

எல்லைப் பகுதிகளில் அமைதியைப் பேண இந்தியா மற்றும் சீனா இடையே 21-வது சுற்று பேச்சுவார்த்தைகளில் உறுதி ஏற்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய வெளியுறவு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்தியா-சீனா எல்லைப் பகுதிகளில் அமைதியை மீட்டெடுப்பதற்காக நட்பு ரீதியிலும், சுமுகமான சூழ்நிலையிலும் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், இரு தரப்பினரும் இது குறித்து தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட ராணுவ மற்றும் ராஜாங்க முறைகள் மூலம் அடுத்தடுத்து முன்னேறி செல்ல, தொடர்பை பாதுகாக்க இரு தரப்பும் ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்