இந்தியாவின் ஸ்மார்ட் சிட்டி - 4 விருதுகளை அள்ளிய தமிழ்நாடு.. குடியரசு தலைவர் கையால் கவுரவம்

x

இந்தியாவின் ஸ்மார்ட் சிட்டி

4 விருதுகளை அள்ளிய தமிழ்நாடு..!

குடியரசு தலைவர் கையில் கவுரவம்

ஸ்மார்ட் நகர விருது போட்டியில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

மத்திய அரசின் ஸ்மார்ட் நகரங்கள் மேம்பாட்டு பணிக்காக நாடு முழுவதும் 100 நகரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, கடந்த 2015-ம் ஆண்டில் இருந்து அந்த நகரங்களில் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. சுமார் ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 635 கோடி மதிப்பீட்டில் 6 ஆயிரத்து 41 திட்டங்கள் முடிக்கப்பட்டுள்ளன. எஞ்சியுள்ள ஆயிரத்து 894 திட்டங்களை அடுத்த ஆண்டு ஜூன் மாதத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், ஸ்மார்ட் நகர விருதுகளுக்கான போட்டி, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சூரத்தில் நடைபெற்றது. அதன் முடிவுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மாநில விருது பிரிவில் தமிழ்நாட்டுக்கு இரண்டாவது இடம் கிடைத்துள்ளது. மத்திய பிரதேச மாநிலம், முதலிடத்தைப் பெற்றுள்ளது. சூழல் பிரிவில் கோவையும், கலாசாரம் பிரிவில் தஞ்சாவூரும், சமூக அம்சங்கள் பிரிவில் தூத்துக்குடியும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. தேசிய ஸ்மார்ட் நகர விருதுக்கு இந்தூர் நகரம் தேர்வு பெற்றுள்ளது. இந்த நகரங்களுக்கு அடுத்த மாதம் 27-ந் தேதி இந்தூரில் நடைபெறும் விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பரிசுகளை வழங்குகிறார்.



Next Story

மேலும் செய்திகள்