உலகை அலறவிடும் இந்தியாவின் ஹைடெக் சிட்டி... இங்க மாட்டுனா கதை கந்தல்தான்! வெளியான் ரிப்போர்ட்

x

உலகை அலறவிடும் இந்தியாவின் ஹைடெக் சிட்டி.. இங்க மாட்டுனா கதை கந்தல்தான்! வெளியான் ரிப்போர்ட்

உலகம் முழுவதும் அதிகரித்து வரும் வாகன பெருக்கம் போக்குவரத்தை பெரும் சவாலாக்கி வருகிறது. குறிப்பாக

பெரு நகரங்களில் பீக் ஹவர்ஸ் எனப்படும் காலை மற்றும் மாலை வேளைகளில் சாலைமார்க்கமாக செல்பவர்கள் படும் அவஸ்தை சொல்லி மாளாது...

போக்குவரத்து நெரிசலை குறைக்க என்னதான் புதுப்புது டெக்னிக்குகள் பயன்படுத்தப்பட்டாலும், அவை பெரிய அளவில் பலனளிப்பதில்லை என்பதையே காடுகிறது நடைமுறை எதார்த்தம்.

இந்நிலையில், டச்சு நாட்டைச் சேர்ந்த 'டாம் டாம்' புவி இருப்பிட தொழில்நுட்ப நிறுவனம் ஆண்டுதோறும் போக்குவரத்து நெரிசலால் திக்கு முக்காடும் நகரங்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில் 55 நாடுகளைச் சேர்ந்த 387 நகரங்கள் உள்ளடக்கிய இந்த ஆண்டுக்கான போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்கள் பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது.

இதில், வழக்கம்போல் இந்த ஆண்டும் உலகிலேயே மிகவும் மோசமான டிராபிக் கொண்ட நகரமாக இங்கிலாந்தின் லண்டன் திகழ்கிறது.

ஆனால், சென்ற ஆண்டு இந்த பட்டியலில் உலகிலேயே மோசமான டிராபிக் கொண்ட இரண்டாவது நகரமாக இடம் பெற்றிருந்த இந்தியாவின் பெங்களூரு இம்முறை ஆறாவது இடத்திற்கு இறங்கி, போக்குவரத்து நெரிசலை சமாளிப்பதில் சற்று முன்னேற்றம் கண்டுள்ளது.

லண்டனில் பீக் ஹவர்ஸில் 10 கிலோமீட்டர் தூரத்தை கடக்க சராசரியாக 37 நிமிடங்கள் ஆகும் நிலையில், பெங்களூருவில் 10 கிலோமீட்டர் பயணிக்க 28 நிமிடங்கள் 10 வினாடிகள் ஆவது தெரியவந்துள்ளது.

இந்த பட்டியலில் அயர்லாந்தின் தலைநகரான டப்ளின் 2வது இடத்திலும், கனடாவின் டொராண்டோ நகரம் 3வது இடத்திலும், இத்தாலியின் மிலன் நகரம் 4வது இடத்திலும், பெரு தலைநகர் லிமா 5வது இடத்திலும் உள்ளன.

இந்தியாவிலேயே போக்குவரத்து நெரிசலால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நகரமான பெங்களூரு இந்த பட்டியலில் ஆறாவது இடத்தை பிடித்துள்ள நிலையில், 7வது இடத்தில் மகாராஷ்டிராவின் புனே நகரம் இடம் பிடித்துள்ளது.

போக்குவரத்தால் பெரும் சிரமத்தை சந்தித்து வரும் தலைநகர் டெல்லி இந்த பட்டியலில் 44 வது இடத்தையும், மகாராஷ்டிரா தலைநகர் மும்பை 54 வது இடத்தையும் பிடித்துள்ளன.

சென்ற முறை போக்குவரத்தை சமாளிக்க முடியாமல் லண்டன் தள்ளாடிய போது, லண்டனுக்கு கை கொடுத்த போக்குவரத்து நெரிசல் வரியை பெங்களூருவிலும் கர்நாடகா அரசு முன்னெடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்