படைப்பு சுதந்திரத்தை மட்டுப்படுத்த முடியாது - உயர் நீதிமன்றம்/
பா.ஜ.க. எம்.பி. கங்கனா ரானாவத் இணந்து தயாரித்து, நடித்துள்ள எமர்ஜென்ஸி திரைப்படத்துக்கு மத்திய திரைப்பட தணிக்கைக் குழு சான்றளிப்பதில் தாமதம் செய்வதாக தெரிவித்து தொடரப்பட்ட வழக்கை மும்பை உயர்நீதிமன்ற நீதிபதிகள் பி.பி.கொலாபாவாலா, ஃபிர்தோஷ் பூனிவாலா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
எமர்ஜென்ஸி திரைப்படத்துக்கு, மத்திய திரைப்பட தணிக்கைக் குழு சான்றளிக்காமல் இருப்பதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், செப்டம்பர் 25க்குள் முடிவு எடுக்க உத்தரவிட்டது. பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும் என்ற அச்சத்தால் படைப்பாக்க சுதந்திரத்தை மட்டுப்படுத்த முடியாது என கருத்து தெரிவித்த நீதிபதிகள், ஆளுங்கட்சி, சொந்த எம்.பி.க்கு எதிராக செயல்படுகிறதா? என்றும் கேட்டு, விசாரணையை தள்ளி வைத்தனர்.
Next Story