மீண்டும் களமிறங்கிய இந்திய ராணுவம்
2020 ஆம் ஆண்டு கள்வான் பள்ளத்தாக்கில் இந்தியா - சீனா ராணுவ வீரர்கள் மோதலை தொடர்ந்து இருதரப்பிலும் எல்லையில் ராணுவம் குவிக்கப்பட்டது. தொடர் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டவும், இரு தரப்பிலும் படைகள் விலக்கிக் கொள்ளப்பட்டன. இந்த சூழலில் எல்லை கட்டுப்பாடு கோடு பகுதியில் டெம்சோக்கில் வழக்கமான ரோந்து பணியை இந்திய ராணுவம் தொடங்கியிருக்கிறது. இதேபோல் டெப்சாங் பகுதியில் ரோந்து விரைவில் தொடங்கும் என ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த ரோந்து அடிப்படையில், அதாவது இருதரப்பும் ரோந்து அட்டவணையை பகிர்ந்து ரோந்து பணியை மேற்கொள்ளவிருக்கிறது.
Next Story