2024 நாடாளுமன்ற தேர்தல் - I.N.D.I.A. கூட்டணி 'Master Plan' - "ஆம் ஆத்மி 'B' டீம் தான்"

x

2024 நாடாளுமன்ற தேர்தல் பணியில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. பாஜகவை ஆட்சியை அகற்றும் வியூகமாக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கியுள்ளன. இந்த கூட்டணியில் எதிரும் புதிருமாக உள்ள காங்கிரசும், ஆம் ஆத்மியும் இடம் பெற்றுள்ளது. இந்த சூழலில் குஜராத்தில் காங்கிரசுடன் இணைந்து பாஜகவை எதிர்கொள்வோம் எனவும் கூட்டணி குறித்த பேச்சு ஆரம்ப கட்டத்தில் உள்ளது எனவும் ஆம் ஆத்மி மாநில தலைவர் இசுதன் காத்வி கூறியுள்ளார். இந்தியா கூட்டணி உடன்படிக்கைபடி தொகுதி பங்கீடு இருக்கும் எனவும் காங்கிரசும், ஆம் ஆத்மியும் இணைந்து போட்டியிட்டால் 26 தொகுதியும் வசமாகும் எனவும் தெரிவித்துள்ளார். ஆனால் இதுகுறித்து மத்திய தலைமையே முடிவு செய்யும் என குஜராத் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மணிஷ் தோஷி குறிப்பிட்டுள்ளார். மறுபுறம் இசுதன் காத்வி அறிவிப்பு ஆம் ஆத்மி காங்கிரசின் பி டீம் என்பதை உறுதி செய்துவிட்டது என பாஜக விமர்சனம் செய்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்