`பட்நோடா’ அட்டாக்.. இந்திய ராணுவத்தை அதிரவிட்ட ஒரு தகவல்

x

ஜம்மு-காஷ்மீரில், ராணுவ வாகனம் மீதான தாக்குதல் சம்பவத்தில் பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு தொடர்பு உள்ளதாகவும், அதிநவீன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கத்துவா மாவட்டம் மச்சேடி மலைப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்ட ராணுவ வாகனம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 வீரர்கள் உயிரிழந்தனர். இந்நிலையில், மேலும் சில தீவிரவாதிகள் பதுங்கியிருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், பாதுகாப்பு படையினர், தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். உதம்பூரில் உள்ள ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, தாக்குதல் சம்பவத்தில் பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு தொடர்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கையெறி குண்டுகளை வீசியதுடன், எம்.4 கார்பைன் ரைஃபிள் உட்பட அதிநவீன ஆயுதங்கள் மற்றும் சக்திவாய்ந்த வெடிபொருட்களை பயன்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. தாக்குதல் நிகழ்ந்த பட்நோடா (Badnota) கிராமத்தில், இணைப்புச் சாலை இல்லாததுடன், குறைந்த வேகத்திலேயே வாகனங்கள் செல்ல முடியும் என்பதால், அந்த இடத்தை தீவிரவாதிகள் தேர்வு செய்து தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்