இன்று இலங்கை கொண்டு செல்லப்படுகிறது சாந்தன் உடல்

x

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான சாந்தன், உடல்நலக்குறைவால் கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி உயிரிழந்தார். சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ,அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பின்னர், கீழ்பாக்கத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு கார்கோ விமானத்தில் கொண்டு செல்வதற்கு ஏற்ப உடலை சவப்பெட்டியில் வைத்து காவல்துறை பாதுகாப்புடன் சென்னை விமான நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து, இன்று காலை 9.40 மணிக்கு விமானம் மூலம் கொழும்புக்கு அனுப்பப்படும் சாந்தன் உடல், பின்னர் அங்கிருந்து யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்படுகிறது. இறுதி அஞ்சலிக்கு பின், சாந்தன் உடலுக்கு சனிக்கிழமை காலை இறுதிச்சடங்கு நடைபெறும்.


Next Story

மேலும் செய்திகள்