சொந்த மண்ணில் 'ஒயிட்வாஷ்' ஆனது இந்தியா
சொந்த மண்ணில் 'ஒயிட்வாஷ்' ஆனது இந்தியா
சொந்த மண்ணில் இந்தியாவை அசைக்க முடியாது என முன்வைக்கப்படும் கருத்து தகர்ந்து இருக்கிறது. ஸ்பின்னர்களை இந்திய பேட்டர்கள் சுலபமாக எதிர்கொள்வார்கள் என்ற பரவலான எண்ணம் சுக்குநூறாகி இருக்கிறது.
பெங்களூரு, புனேவின் நீட்சியாக மும்பையிலும் தோல்வியைத் தழுவி, சொந்த மண்ணில் நியூசிலாந்திடம் சரணடைந்து ரசிகர்களை சோகம்கொள்ள வைத்திருக்கிறது இந்தியா...
பெங்களூருவில் முதல் இன்னிங்ஸில் வெறும் 46 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனதில் தொடங்கிய சரிவு மும்பையில் 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்விகண்ட வரை நீண்டது. இறுதிவரை இந்திய அணியால் இந்த தொடரில் மீட்சி காணவே முடியவில்லை......
இந்திய அணியின் பலமாகப் பார்க்கப்படும் பேட்டர்கள், முன்னெப்போதும் இல்லாத வகையில் சொந்த மண்ணில் சொதப்பியதே தோல்விக்கான பிரதானக் காரணம்... சராசரியான நியூசிலாந்து ஸ்பின்னர்களைப் பார்த்து நடுங்கினார்கள் எனும் சொல்லும் அளவிற்கு இந்திய வீரர்களின் பேட்டிங் இருந்தது.
ப்ரீத் இந்தியா விக்கெட்ஸ் நியூசிலாந்து ஸ்பின்னர் ஓவர்களில்
நிலைத்து நின்று பார்ட்னர்ஷிப் அமைப்பதுதான் டெஸ்ட் போட்டிகளின் அடிப்படை இலக்கணம்... இந்தத் தொடரில் இந்திய வீரர்களிடம் பொறுமை இருந்ததாகத் தெரியவில்லை... தவறான ஷாட் தேர்வுகளால் அற்பமாக ஆட்டமிழந்தனர். மீள முடியாதவண்ணம் ஒவ்வொரு இன்னிங்ஸிலும் இந்தியா பெருஞ்சரிவைத்தான் சந்தித்தது.
ப்ரீத் மும்பை டெஸ்ட்டில் 2வது இன்னிங்ஸில் சர்ஃப்ராஸ் கான் லாங்கில் கேட்ச் ஆகும் காட்சி, கில், ஜடேஜா ஆட்டமிழக்கும் காட்சி
இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்களாகப் பார்க்கப்படும் ரோகித்தும் கோலியும் இந்தத் தொடரில் ஜொலிக்கத் தவறியதும் தோல்விக்கு முக்கியக் காரணம்... தொடர் முழுவதும் இருவரும் தடுமாறினர். சொற்ப ரன்னில் விக்கெட்டுகளைப் பறிகொடுத்தனர். பெரிய இன்னிங்ஸ்களை இருவரும் ஆடவில்லை...
ப்ரீத் ரோகித், கோலி விக்கெட்ஸ்
இளம் வீரர்கள் பொறுப்புணர்ந்து consistent ஆக விளையாடாததும் இந்தியாவை வரலாற்றுத் தோல்வியின் பக்கம் நிறுத்தி இருக்கிறது. ஜெய்ஸ்வாலும் ரிஷப் பண்ட்டும் ஆறுதல் அளித்தனர். ஆனால் கில், சர்ஃப்ராஸ் கான் பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை...
ஆல்ரவுண்டர் ஜடேஜா பவுலிங்கில் பங்களித்த அளவிற்கு பேட்டிங்கில் பங்களிக்கவில்லை... கிடைத்த வாய்ப்பை வாஷிங்டன் சுந்தர் பயன்படுத்திக்கொண்டார். அதே சமயம் அஸ்வின் சோபிக்கத் தவறினார்.
ரோகித் - கம்பீர் கூட்டணியின் வீரர்கள் தேர்வும் ஆட்ட வியூகங்களும் பல்வேறு வினாக்களுக்கு வித்திட்டுள்ளன. பெங்களூருவில் டாஸ் வென்று பேட்டிங் எடுத்தது தொடங்கி சிராஜை நைட்வாட்ச் மேனாக களமிறக்கியது வரை இந்தக் கூட்டணியின் திட்டங்கள் பெரிய அளவில் எடுபடவில்லை.
தோல்விக்கு கேப்டன் ரோகித் சர்மா முழுப் பொறுப்பேற்று இருக்கும் நிலையில், ஆஸ்திரேலிய மண்ணில் விரைவில் ஆரம்பமாகும் பார்டர்-கவாஸ்கர் தொடரில் இந்திய அணி மீண்டெழ வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பம்....