வரலாற்றை மாற்றி எழுதிய இந்தியா..! அடுத்த 14 நாட்கள்... 'ரோவர்' செய்யப்போகும் மெகா சம்பவம்

x

நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக சந்திரயான் 3 விண்கலத்தை தரையிறக்கி சரித்திர சாதனையை படைத்துள்ளது இஸ்ரோ.

பெங்களூருவில் உள்ள இஸ்ரோ மையத்தில் இருந்து, சரியாக 5.44மணிக்கு சந்திரயான்-3 விண்கலத்தை நிலவில் இறக்கும் பணியை விஞ்ஞானிகள் தொடங்கினர். ​விக்ரம் லேண்டரின் உயரம் மற்றும் வேகத்தை, இஸ்ரோ விஞ்ஞானிகள் படிப்படியாக, குறைக்க தொடங்கினர். சரியாக 6.04 மணிக்கு விக்ரம் லேண்டர் நிலவின் தென் பகுதியில் வெற்றிகரமாக தரை இறங்கியது. இந்த வரலாற்று நிகழ்வை உற்சாகத்துடன் கைதட்டி கொண்டாடினர் இஸ்ரோ விஞ்ஞானிகள். நிலவின் தென் துருவத்தில் சந்திரயான்-3 விண்கலத்தை தரை இறக்கியதன் மூலம் உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தி உள்ளது இஸ்ரோ. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவை தொடர்ந்து நிலவில் தடம் பதித்த நான்காவது நாடு என்ற பெருமையும் இந்தியாவுக்கு கிடைத்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்