"இந்த நம்பரிலிருந்து கால் வந்தால் தயவுசெய்து எடுத்து விடாதீர்கள்" - மக்களுக்கு போலீஸ் வார்னிங்

x

சர்வதேச வாட்ஸ்அப் அழைப்புகளை ஏற்க வேண்டாமென, சென்னை பெருநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. சமீப காலமாக சைபர் குற்றங்கள் அதிகரித்துவரும் சூழலில், காவல்துறை தரப்பில் விழிப்புணர்வு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது பதிவிட்டுள்ள காவல்துறை, அறியப்படாத சர்வதேச வாட்ஸ்அப் அழைப்புகளை ஏற்க வேண்டாம் என்றும், அவை தனிப்பட்ட தரவு மற்றும் வங்கிக் கணக்கிற்கு ஆபத்தானவையாக இருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது. மேலும், இவை குறித்த விவரங்களை 1930 என்ற எண்ணில் பதிவிடுமாறும், காவல்துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்