"ஆசிரியர் உறங்கும் போது அவரின் கால்களை பிடித்து விட்டேன்" - ஆசிரியர்கள் மத்தியில் ஆளுநர் பேச்சு

x

தனது பள்ளி பருவ காலத்தில் ஆசிரியர் குளிப்பதற்கு கிணற்றிலிருந்து தண்ணீர் இறைத்து கொடுத்ததாகவும், உறங்கும்போது அவரின் கால்களை பிடித்து விட்டதாகவும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

சிறப்பாக பணிபுரிந்ததற்காக மாநில அரசுகள் சார்பிலும், தேசிய அளவில் விருதுகளை பெற்ற ஆசிரியர்கள் கௌரவிப்பு நிகழ்ச்சியும், ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியும் ஆளுநர் மாளிகையில் இன்று மாலை நடந்தது . மத்திய, மாநில அரசுகள் சார்பாக விருதுகளை பெற்ற 24 ஆசிரியர்களை ஆளுநர் ரவி கௌரவித்தார். விழாவில் பேசிய ஆளுநர் ரவி,

தனது பள்ளி பருவ காலத்தில் ஆசிரியர் குளிப்பதற்கு கிணற்றிலிருந்து தண்ணீர் இறைத்து கொடுத்ததாகவும், ஆசிரியர் உறங்கும் போது அவரின் கால்களை பிடித்து விட்டதாகவும் ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார். ஆசிரியரை விட மேலானவர் குரு என்றும், இதுதான் நாட்டின் கலாச்சாரம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்