``இனி தப்பாது`'... ``வயநாட்டில்'' - குற்றம்சாட்டிய கேரளா... உறுதியாக அடித்து சொன்ன மத்திய அரசு

x

``இனி தப்பாது`'... ``வயநாட்டில்'' - குற்றம்சாட்டிய கேரளா... உறுதியாக அடித்து சொன்ன மத்திய அரசு


2025 ஆண்டின் இறுதிக்குள் வயநாட்டை மையமாக கொண்டு புதிய ரேடார் அமைப்பு அமைக்கப்படும் என கேரள உயர்நீதிமன்றத்தில், மத்திய அரசு தெரிவித்துள்ளது.


வயநாடு மறுவாழ்வு தொடர்பான வழக்கு விசாரணை கேரள உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வயநாட்டின் மறுசீரமைப்புக்கு கேரள அரசு கோரிய நிலையில், மத்திய அரசு சிறப்பு நிதி ஒதுக்கவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைக்கப்பட்டது. அப்போது, முண்டகை, சூரல்மலை நிலச்சரிவில் கேரளாவின் சிறப்பு உதவி தொடர்பான கோரிக்கை பரிசீலனையில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது. மேலும், வயநாட்டை மையமாக கொண்டு புதிய ரேடார் அமைப்பு 2025 இறுதிக்குள் செயல்படும். வானிலை எச்சரிக்கை அமைப்பும் சிறப்பாக செயல்படும் என மத்திய அரசு, பிரமாணப் பத்திரம் மூலம் தெரிவித்துள்ளது. மேலும், 2026ல் மங்களூருவில் நிறுவப்படும் ரேடார் அமைப்பு வட கேரளாவிலும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்