பெண்ணுக்குப் பாலியல் துன்புறுத்தல்... ஓலாவுக்கு விழுந்த அடி - கோர்ட் அதிரடி உத்தரவு

x

பெங்களூரைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த 2019-ஆம் ஆண்டு, ஓலா காரில் பயணம் செய்தபோது, ஓட்டுநர் அந்தப் பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அந்த பெண், ஓலா நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையத்தில் புகார் கொடுத்து, நிறுவனம் தரப்பில் இருந்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் கர்நாடக உயர்நீதிமன்றத்தை நாடினார். வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 5 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று ஓலா நிறுவனத்திற்கு உயர்நீதிமன்ற நீதிபதி எம்.ஜி.எஸ். கமல் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், ஓலா நிறுவனத்தின் உள்துறை புகார் குழு, 90 நாட்களில் விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும், பெண்ணின் வழக்கு செலவுக்காக 50 ஆயிரம் ரூபாய் வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்