முதல்முறையாக சகாரா பாலைவனத்தில் வெள்ளம் - வைரலாகும் அழகிய காட்சிகள்
- தென்கிழக்கு மொராக்கோவிலிருக்கும் மிக வறண்ட பாலைவனத்தில் மழை அரிதாகவே பெய்யும். பாலைவனத்தில் ஆண்டுதோறும் 250 மில்லி மீட்டருக்கு குறைவாக மழை பெய்யும் இடத்தில், செப்டம்பர் மாதத்தில் 2 நாட்களில் கனமழை கொட்டியதாக மொராக்கோ அரசு தெரித்துள்ளது. டாடா பகுதியில் ஒரே நாளில் 100 மில்லிமீட்டர் மழை பதிவாகியிருக்கிறது. 50 ஆண்டுகளுக்கு பிறகு குறுகிய காலத்தில் இவ்வளவு அதிக மழை பாலைவனத்தில் பெய்திருப்பதாக அந்நாட்டு வானிலை மையம் தெரிவித்துள்ளது. கனமழையால் பனை மரங்கள் மற்றும் மணல் திட்டுகளுக்கு மத்தியில் நீல தாடகமாக நீர் அழகாக காட்சியளிக்கும் புகைப்படங்கள் பலரது மனதை கொள்ளை கொண்டிருக்கிறது.
Next Story