ஆங்கிலேயர் கைவிட்ட கனவு திட்டம்..! சைலண்டாக 'சரித்திர' சம்பவம்.. இணையும் இந்தியா-இலங்கை
இந்தியா - இலங்கை இடையியே தரைவழிப் பாலம் அமைக்கும் திட்டத்திற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கைக்கான இந்திய தூதர் எச்.இ.சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ராமேஸ்வரத்திற்கும் தலைமன்னாருக்கும் இடையே படகுச் சேவையை தொடங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும்,
இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே தரைவழிப்பாலம் அமைப்பதற்கான செயல் திட்டங்களையும் தொடங்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இதன் மூலம் வணிகம், சுற்றுலா உள்ளிட்ட அபிவிருத்தி திட்டங்கள் மேம்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
Next Story