ஹரியானா அரசியலில் அடுத்த திருப்பம்..."அடுத்த முதல்வராகும் மிகவும் நெருக்கமானவர்"

x

நயாப் சிங் சைனி ஹரியானா முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்... மனோகர் லால் கட்டார் பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, ஹரியானா மாநிலத் தலைநகர் சண்டிகரில் நடைபெற்ற பாஜக எம்எல்ஏக்கள் குழு கூட்டத்தில் நயாப் சிங் சைனி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து ஹரியானா மாநில முதல்வராக இன்று மாலை 5 மணிக்கு பதவியேற்கிறார் சைனி. இந்த ஆண்டு இறுதியில் ஹரியானா மாநிலத்தில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், சைனி அடுத்த 9 மாதங்களுக்கு ஹரியானா முதல்வராக பதவி வகிப்பார்... மனோகர் லால் கட்டாருக்கு நெருக்கமானவராக அறியப்படும் சைனி, இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர். 2014ல், முதன்முதலில் நரேன்கர் தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாகத் தேர்வான அவர், 2016ல் அமைச்சரானார்... 2019 இல் குருக்ஷேத்ராவிலிருந்து எம்.பி ஆகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சைனி, அதன் பிறகு 2023ல், பாஜக மாநிலத் தலைவரானார். சைனி ஹரியானா முதல்வராக பதவியேற்றுள்ள நிலையில், குருஷேத்ரா மக்களவைத் தொகுதியில் பாஜக புதிய வேட்பாளரை நிறுத்தவுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்