சுயேட்சையாக களமிறங்கும் நாட்டின் பணக்கார பெண்மணி - நாட்டையே திரும்ப வைத்த நாமினேஷன்
ஹரியானா சட்டமன்றத் தேர்தலில், பா.ஜ.க. எம்.பி. நவீன் ஜிண்டாலின் தாயார் சாவித்ரி ஜிண்டால், சுயேட்சையாக போட்டியிட மனுத்தாக்கல் செய்தார். ஹரியானாவில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் அக்டோபர் 5ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்நிலையில், ஹிசார் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட, சாவித்ரி ஜிண்டால் வேட்பு மனு தாக்கல் செய்தார். ஹிசார் தொகுதியில் அமைச்சர் கமல்குப்தாவை எதிர்த்து களமிறங்குகிறார். 29.1 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்துக்களுடன், நாட்டின் பணக்கார பெண்மணி என போர்ப்ஸ் இந்தியா அண்மையில் பட்டியலை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
Next Story