முடிவுக்கு வந்த திருமண வாழ்க்கை.. விவாகரத்தை அறிவித்தார் ஹர்திக் பாண்டியா
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, கடந்த 2020ம் ஆண்டு செர்பியாவைச் சேர்ந்த மாடலும் நடிகையுமான நடாஷா ஸ்டான்கோவிக்கை திருமணம் செய்தார். இவர்களுக்கு அகஸ்தியா என்ற குழந்தை உள்ளது. ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் கேப்டனாக ஹர்திக் செயல்பட்டபோது போட்டிகளைக் காண நடாஷா வரவில்லை. இதனால் இருவரும் விவாகரத்து பெற இருப்பதாக தகவல் வெளியானது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக ஹர்திக் பாண்டியா உடன் எடுத்த புகைப்படங்களை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நடாஷா நீக்கினார். இந்நிலையில் இருவரும் பரஸ்பரம் பிரிந்துவிட்டதாக இன்ஸ்டாகிராமில் ஹர்திக் பாண்டியா பதிவிட்டுள்ளார். இது கடினமான முடிவு எனக் குறிப்பிட்டுள்ள ஹர்திக் பாண்டியா, இருவரின் வாழ்க்கையிலும் அகஸ்தியா மையமாக இருப்பார் எனக் கூறியுள்ளார். தாங்கள் தேர்வு செய்த முடிவிற்கு அனைத்து தரப்பினரும் மதிப்பளிக்க வேண்டும் என்றும் ஹர்திக் பாண்டியா கேட்டுக்கொண்டுள்ளார்.