நாட்டை உலுக்கிய பாலியல் வழக்கு...சவுக்கடி தீர்ப்பு தந்த உச்ச நீதிமன்றம்

x

பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 11 பேரை விடுவித்த குஜராத் அரசின் உத்தரவை ரத்து செய்த தீர்ப்பை மறு ஆய்வு செய்ய கோரி, குஜராத் அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலத்தில், கடந்த 2002-ஆம் ஆண்டு கோத்ரா சம்பவத்துக்கு பின், பில்கிஸ் பானு என்பவரின் குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் படுகொலை செய்யப்பட்டனர். பில்கிஸ் பானு 20 வயது கர்ப்பிணியாக இருந்தபோது, 11 பேரால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டு 14 ஆண்டுகளாக சிறையில் இருந்த 11 பேரை, குஜராத் அரசு கருணை அடிப்படையில் விடுதலை செய்தது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், 11 பேரை விடுவித்த குஜராத் அரசின் உத்தரவு ரத்து செய்து உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி, குஜராத் அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், குஜராத் அரசுக்கு எதிராக தீர்ப்பில் தெரிவிக்கப்பட்ட கடுமையான கருத்துக்களை நீக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்