``ரூ8ஆயிரம் கோடி வசூல்...'' ``GSTஐ நீக்குங்கள்..'' மத்திய அமைச்சரே எதிர்ப்பு

x

ஆயுள் காப்பீட்டு பிரீமியத்தின் மீது கடந்த நிதியாண்டில், ௮ ஆயிரத்து 262 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்பட்டுள்ளது.

இதற்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி, ஆரம்பம் முதல் ஆயுள் காப்பீடு பிரீமியம் மீது 18 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

ஏழைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்தியேக காப்பீடு திட்டங்களுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஆயுள் காப்பீடு பிரீமியத்தின் மீது 2021-22இல் 5 ஆயிரத்து 354 கோடி ரூபாயும், 2022-23இல் 7 ஆயிரத்து 638 கோடி ருபாயும்,ஆயுள் காப்பீடு பிரீமியத்தின் மீது கடந்த மூன்று ஆண்டுகளில் விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி குறித்த விவரங்களை வழங்குமாறு மத்திய அரசுக்கு மக்களவை எம்பி மாலா ராய் கேள்வி எழுப்பியிருந்தார். 2023-24இல் 8 ஆயிரத்து 262 கோடி ரூபாயும் ஜிஎஸ்டி வரியாக வசூலிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

ஆயுள் காப்பீடு பீரிமியம் மீதான 18 சதவீத ஜிஎஸ்டி வரியை நீக்க வேண்டும் என சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி, நிதி அமைச்சர் கடந்த வாரம் கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்