பசுமை பட்டாசு வழக்கு - உச்சநீதிமன்றம் கெடு
பசுமை பட்டாசு வழக்கில், ஒழுங்குமுறை விதிகளை அமல்படுத்தாவிட்டால், அவை கேலிக் கூத்தாகிவிடும் என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. பட்டாசு உற்பத்திக்கும், விற்பனைக்கும் தடை விதிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு, உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.எஸ்.போபன்னா, எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது,
தடை செய்யப்பட்ட பட்டாசுகளை முறைப்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர். ஒழுங்குமுறை விதிகளை அமல்படுத்தாவிட்டால் அவை கேலிக்கூத்தாகிவிடும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
Next Story