இருளில் மூழ்கிய அரசு மருத்துவமனை.. ஃபிளாஷ் லைட்டில் நோயாளிகளுக்கு சிகிச்சை - திணறும் மருத்துவர்கள்..
மின்வெட்டால் அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனை இருளில் மூழ்கிய நிலையில், செல்போன் டார்ச் லைட் வெளிச்சத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த அரசு மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திராவின் மன்யம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மின்தடை ஏற்பட்டுள்ளது. இதனால் பார்வதிபுரத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் மின் விநியோகம் தடைபட்டு இருளில் மூழ்கியது. இருந்தபோதும், இரவில் அங்கு சிகிச்சைக்காக நோயாளிகள் பலர் வந்த வண்ணம் உள்ளனர். இதனையடுத்து, மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் செல்போன் டார்ச் வெளிச்சத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கினர். மின்வாரிய ஊழியர்கள் கண்டுகொள்ளாததால் இதுபோன்ற மின் வெட்டு ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
Next Story