மகாராஷ்டிரா, அசாம், பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்...
அதன்படி, புதுச்சேரி துணைநிலை ஆளுநராக கே. கைலாஷ்நாதன் நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல், மகாராஷ்டிரா மாநில ஆளுநராக சி.பி. ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர்களைத் தொடர்ந்து தெலங்கானா மாநிலத்தின் ஆளுநராக ஜிஷ்ணு தேவ் வெர்மா, பஞ்சாப் மாநிலத்தின் ஆளுநராகவும், சண்டிகரின் துணைநிலை ஆளுநராகவும் குலாப் சந்த் கட்டாரியா, ராஜஸ்தான் மாநில ஆளுநராக ஹரிபாபு கிசன்ராவ் பாக்டே, சத்தீஸ்கர் மாநில ஆளுநராக ரமேன் டெகா உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அசாம் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்ட லக்ஷ்மன் பிரசாதுக்கு, மணிப்பூர் மாநில ஆளுநர் பொறுப்பும் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. மேலும், சிக்கிம் மாநில ஆளுநராக ஓம் பிரகாஷ் மாத்தூரும், மேகாலயா மாநிலத்தின் ஆளுநராக சி. ஹெச். விஜய்சங்கரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
Next Story