ஆபத்தில் அந்தரங்க தகவல்கள் - களவு வேலையில் இறங்கிய கூகுள்.. BARDல் தில்லாலங்கடி வேலை..!

x

Search Engine புகழ் கூகுள் நிறுவனம் அவ்வப்போது ஏதாவது விசயங்களை செய்துவிட்டு மன்னிப்பு கேட்பதும், மாட்டிக் கொள்ளவதும் சமீபத்தில் அதிகரித்துள்ளது...

பயனர்களின் அந்தரங்க செய்திகளை எட்டிபார்த்த விவகாரத்தில் கூகுள் 5 மில்லியன் டாலர்கள் அபாரதம் கட்டிய காலமும் உண்டு. தற்போது மீண்டும் அதே தவறை செய்ய காத்திருக்கிறது

உலகெங்கிலும் கூகுள் செயலி தொடர்பான வகையறாவை 300 கோடிக்கும் அதிகமான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். எத்தனை கோடி பேர் பயன்படுத்தினாலும், அவர்களின் தனிப்பட்ட தகவல்கள் காக்கப்படுகிறதா? என்பதே இங்கு முக்கியம்.

கூகுள் குரோம் பிரவுசரில் உள்ள incognito என்ற வசதியை யாரும் கண்காணிக்க முடியாது மற்றும் அதில் உள்ள தரவுகளை பார்க்க முடியாது என்பதில் செய்த மாற்றம் கூகுளுக்கு அபாரதம் கட்டும் வரை கொண்டு சென்றது. தற்போது இதே போல மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளது கூகுள்.

கூகுள் மெசன்ஜரில் செயற்கை தொழில் நுட்பமான பார்டை BARD இணைக்கும் வேளையில் படு மும்முரமாக இறங்கியுள்ளதாம் கூகுள் நிறுவனம்.

இதன் பீட்டா வடிவங்களை தேர்வு செய்யப்பட்ட பயனர்களுக்கு வழங்கி, முன்னோட்டம் காணும் முயற்சியிலும் இறங்கிவிட்டது.

உங்கள் ஒவ்வொரு நிமிட இணையதள அலசல்களையும் கண்காணித்து உங்களுக்கு வரும் குறுஞ்செய்திகளுக்கு நீங்கள் என்ன பதில் தரலாம் என்று ஆலோசனைகள் வழங்குவதுதான் இதன் நோக்கமாம்.

அதாவது ஒரு பயனரின் உரையாடல்கள், யாருடன் பேசுகிறீர்கள், அடிக்கடி நீங்கள் பயன்படுத்தும் வார்த்தைகள் என்ன உள்ளிட்ட தரவுகள் கண்காணிக்கப்படும்.

இதன் மூலம் பயனர்களின் அந்தரங்க விசயங்கள் கண்காணிக்கப்படும் ஆபத்தும் உள்ளது. தனிப்பட்ட தகவல்கள் கார்ப்பிரேட்டுகளுக்கு விற்பனை செய்யப்படலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

கூகுள் இதை வெளிப்படையாக ஒப்புக் கொள்ளா விட்டாலும் இதுதான் உண்மை என பல குரல்கள் எழுந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்