குருவாயூரப்பனுக்கு தங்க கிரீடம் வழங்கிய துர்கா ஸ்டாலின்...

x

கேரள மாநிலம் குருவாயூரில் உள்ள புகழ்பெற்ற குருவாயூரப்பன் கோயிலில், தமிழக முதலமைச்சர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம் செய்தார். அப்போது, 14 லட்சம் ரூபாய்க்கும் மேல் மதிப்புள்ள 32 சவரன் எடை கொண்ட தங்க‌க் கிரீமும் வழங்கினார். மேலும், சந்தனம் அரைப்பதற்கான எந்திரத்தையும் துர்கா ஸ்டாலின் வழங்கினார். ஏற்கனவே பலமுறை துர்கா ஸ்டாலின் இந்த கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்துள்ளதாக, கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்