வெளிமாநில தொழிலாளர்களுக்கு ஓணம் பரிசு அறிவித்த கடவுளின் தேசம்

x

கேரளாவில் ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு திட்டத்தின் கீழ், வெளிமாநில தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில், ரேஷன் உரிமை அட்டை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

அம்மாநில குடிமைப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் ஜி.ஆர்.அனில் இத்திட்டத்தை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர், மாநிலத்தில் ஒருவர்கூட பட்டினியால் வாடக்கூடாது என்பதே அரசின் கொள்கை என்றும், வெளிமாநில தொழிலாளர்களுக்கு இது கேரளாவின் ஓணம் பரிசு என்று அமைச்சர் ஜி.ஆர்.அனில் தெரிவித்தார்.

கேரளாவில் வேலை செய்யும் வெளிமாநிலத் தொழிலாளர்கள் ரேசன் பெற ஆதார் அட்டை கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்