ஜி 20 உச்சி மாநாடு பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கை | G20 Event | India | PM Modi
ஜி-20 நாடுகளின் உச்சி மாநாடு டெல்லியில் நாளை நடைபெற உள்ளது. இதனையொட்டி அறிக்கை வெளியிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, வரலாற்று சிறப்புமிக்க பாரத் மண்டபத்தில் நடைபெற உள்ள 18வது உச்சி மாநாட்டை இந்தியா நடத்துவது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார். இந்தியாவின் தலைமையில் நடத்தப்படும் முதல் உச்சி மாநாடு இது என தெரிவித்துள்ள பிரதமர் மோடி, அடுத்த இரண்டு நாட்களில் உலக நாடுகளின் தலைவர்களுடன் ஆக்கப் பூர்வமான விவாதத்தை எதிர்நோக்கி இருப்பதாக தெரிவித்துள்ளார். மக்களை மையப்படுத்திய உள்ளடக்கிய வளர்ச்சிக்கு டெல்லியில் நடைபெறும் உச்சி மாநாடு புதிய பாதை வகுக்கும் என பிரதமர் நரேந்திர மோடி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவின் விருந்தோம்பலை, சிறப்பு விருந்தினர்கள் ரசிப்பார்கள் என தான் நம்புவதாகவும் இந்த தனிப்பட்ட சந்திப்பு நட்பு மற்றும் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் என பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.