ஜி-20 உச்சி மாநாடு... இந்தியாவிற்கு என்ட்ரி தரும் ஜோ பைடன் | Modi | G20 Bali Summit | Joe Biden

x

இந்தியா தலைமையேற்றிருக்கும் ஜி-20 அமைப்பின் உச்சி மாநாடு தலைநகர் டெல்லியில் வரும் 9,10 ஆகிய தினங்களில் நடைபெற உள்ளது... இதில் பைடன் கலந்து கொள்ள முடிவு செய்த போது, அவரது மனைவி ஜில் பைடனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. ஆனால் பைடனுக்கு கொரோனா தொற்று இல்லை என்று தெரிவிக்கப்பட்ட போதிலும் அவர் ஜி-20 மாநாட்டில் கலந்து கொள்வாரா மாட்டாரா என்ற கேள்விகள் எழுந்தன. ஆனால், பைடன் பங்கேற்பை அமெரிக்க வெள்ளை மாளிகை உறுதி செய்தது. இந்நிலையில், அவர் இன்று இந்தியா வரவுள்ளார்... நாளை பிரதமர் மோடியை சந்தித்து, இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்