பெண்களுக்கு பேருந்தில் இலவசம்... பிச்சை எடுத்த ஆட்டோ ஓட்டுனர்கள்.. தெலங்கானாவில் நூதன போராட்டம்
பெண்களுக்கு பேருந்தில் இலவசம்...
பிச்சை எடுத்த ஆட்டோ ஓட்டுனர்கள்..
தெலங்கானாவில் நூதன போராட்டம்
தெலங்கானாவில் மகளிருக்கான இலவச பேருந்து போக்குவரத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி ஆட்டோ ஓட்டுநர்கள் பிச்சை எடுத்துப் போராட்டம் நடத்தினர். மகாலட்சுமி திட்டம் மூலம், சொகுசு பேருந்துகள் தவிர மற்ற அனைத்து அரசு பேருந்திகளிலும் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என தெலங்கானா அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டம், ஆட்டோ ஓட்டும் தொழிலை நலிவடைய வைத்துள்ளதாக ஓட்டுநர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். வருவாய் குறைந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ள ஆட்டோ ஓட்டுநர்கள், இலவச பயண திட்டத்தை கண்டித்து, மாநிலம் முழுவதும் பேருந்து பயணிகளிடம் பிச்சை எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Next Story