பிரபல ஜூவல்லரி கடை வழக்கில் வெளிச்சத்துக்கு வந்த அதிர்ச்சி உண்மை - தோழியை கோடியில் குளிப்பாட்டியது அம்பலம்
ஏ.ஆர்.டி ஜூவல்லர்ஸ் மோசடி வழக்கில், ஜூவல்லரி உரிமையாளரின் நெருங்கிய தோழியும், ஏஜெண்டுமான பெண் ஒருவரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வரிசையில், முதலீடு பணத்திற்கு அதிக லாபம் தருவதாக கூறி வாடிக்கையாளர்களின் கோடிக்கணக்கான பணத்தை ஏ.ஆர்.டி ஜூவல்லர்ஸ் மோசடி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. இது குறித்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், சென்னை முகப்பேரை சேர்ந்த ஏ.ஆர்.டி ஜூவல்லரி உரிமையாளர்கள் இருவர் உட்பட 10 பேரை கைது செய்து சிறையில் அடைத்த போலீசார், கடந்த 2 தினங்களுக்கு முன்பு லீமாரோஸ் என்ற பெண் தரகர் ஒருவரை கைது செய்திருந்தனர். ஏ.ஆர்.டி நிறுவனத்தின் உரிமையாளரான ராபினின் நெருங்கிய தோழியாக இருந்து சுமார் ஒன்றரை கோடி அளவிலான பணத்தை லீமா ரோஸ் மோசடி செய்தது தெரியவர போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.