ஒடிசாவை ஆள போகும் தமிழர்..? பிஜு ஜனதா தளத்தில் இணைந்தார் முன்னாள் IAS வி.கே.பாண்டியன்

x

தமிழகத்தை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி வி.கே. பாண்டியன் பிஜு ஜனதா தளம் கட்சியில் இணைந்து நேரடி அரசியலில் களம்கண்டுள்ளார்.

வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வி.கார்த்திகேய பாண்டியன், 2000ஆம் ஆண்டு ஒடிசா மாநிலத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக பதவி பெற்றார். ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கின் தனிச் செயலாளராக பதவி வகித்த அவர், இரண்டு மாதங்களுக்கு முன்பு விருப்ப ஓய்வு பெற்றார். பின்னர் அம்மாநில அரசின் மாநில வளர்ச்சிக்கான "5T" மற்றும் "நபின் ஒடிசா" திட்டங்களின் தலைவராக வி.கே. பாண்டியன் நியமிக்கப்பட்டார். கேபினட் அமைச்சருக்கு இணையான பதவியை வகித்து வரும் வி.கே. பாண்டியன், ஒடிசா தலைநகர் புவனேஷ்வரில் முதல்வர் நவீன் பட்நாயக் முன்னிலையில் பிஜு ஜனதா தளம் கட்சியில் இணைந்தார். இதன்மூலம் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஒடிசா சட்டப்பேரவைத் தேர்தலில் வி.கே. பாண்டியன் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்