கேரளாவில் நான்காவது முறையாக நிபா பாதிப்பு கண்டுபிடிப்பு

x

கேரளாவில் நான்காவது முறையாக நிபா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, வைரஸ் தடுப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கை தொடர்பாக முடிவு செய்வதற்கு, ஆறு பேர் கொண்ட மத்திய குழு கோழிக்கோடு சென்றனர். குழுவில் நுண்ணுயிரியலாளர் மால சாப்ரா, தேசிய நோய் கட்டுப்பாட்டு மைய துணை இயக்குனர் ஹிமான்ஷூ சௌஹான், இணை இயக்குனர் மீரா துரியா உள்ளிட்ட பல்துறை வல்லுநர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்த குழு, நிபா வைரஸ் தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளிடம் ஆலோசனை மேற்கொண்டனர். தினந்தோறும் மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்து, மத்திய அரசுக்கு அன்றே அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தினார். இதுவரை மேற்கொண்ட பணிகள் அடுத்த கட்டமாக மேற்கொள்ளப்பட வேண்டியவை, திட்டமிட்டு உள்ள பணிகள் ஆகியன குறித்து விவாதித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்