தமிழகத்தை தொடர்ந்து கர்நாடகாவிலும் பஞ்சுமிட்டாய்க்கு அதிரடி தடை..
புதுச்சேரி, தமிழகத்தை தொடர்ந்து கர்நாடகாவிலும் நிறமூட்டப்பட்ட பஞ்சுமிட்டாய்க்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக சுகாதாரத்துறையினர், பல்வேறு கடைகளில் இருந்து பஞ்சுமிட்டாய், கோபி மஞ்சூரியன் ஆகியவற்றின் மாதிரிகளை ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் பஞ்சு மிட்டாயில் நிறத்திற்காக ரோடாமைன் பி என்னும் வேதிப்பொருளும், கோபி மஞ்சூரியனில் சன்செட் என்னும் வேதிப்பொருளும் இருப்பது தெரியவந்தது. இந்த வேதிப்பொருட்கள் புற்றுநோயை ஏற்படுத்தும் தன்மை கொண்டவை என்பதால், நிறமூட்டப்பட்ட பஞ்சுமிட்டாய் மற்றும் கோபி மஞ்சூரியனுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை மீறி விற்பனை செய்பவர்களுக்கு, 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், பத்து லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நிறமிகள் இன்றி விற்பனை செய்யப்படும், பஞ்சுமிட்டாய் மற்றும் கோபி மஞ்சூரியனுக்கு தடை ஏதும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.