வெளியே வந்தால் உயிருக்கு ஆபத்து..வெள்ளித்தில் மிதக்கும் பிணங்கள் -55 நாள் 113.. ரூ.10,000 கோடி நாசம்

x

இமாச்சலப் பிரதேசத்தில் கனமழை பாதிப்பால் பலியானவர்கள் எண்ணிக்கை 74ஆக அதிகரித்துள்ளது. மாயமான 21 பேரைத் தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

பருவமழை தொடங்கிய 55 நாட்களில் மாநிலத்தில் 113 நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளதால், பொதுப்பணித் துறைக்கு 2 ஆயிரத்து 491 கோடி ரூபாயும், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு ஆயிரம் கோடி ரூபாயும் இழப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தமாக இமாச்சலப் பிரதேசம் முழுவதும் 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சேதம் ஏற்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு தெரிவித்துள்ளார். இந்திய வானிலை ஆய்வு மையம், சிம்லா, சோலன், மண்டி, சம்பா மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் கனமழையுடன் சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று கணித்துள்ளது. மாநில பொருளாதாரத்திற்கு உந்து சக்தியாக விளங்கும் சுற்றுலா மற்றும் ஆப்பிள் வர்த்தகம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. டாக்சி ஓட்டுநர்கள் வருமானம் அதள பாதாளத்திற்கு சென்று விட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்