முதல் உலகப்போர் நினைவு தினம் - புதுச்சேரியில் மக்கள் அஞ்சலி | Puducherry | 1st World War
முதலாம் உலகப்போர் நினைவு தினம் புதுச்சேரியில் இன்று அனுசரிக்கப்படுகிறது. புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள பிரெஞ்சு போர் வீரர் நினைவு சின்னத்தில் முதலாம் உலகப் போரின் போது உயிர்நீத்த வீரர்களுக்கும், பிரான்ஸ் நாட்டு மக்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது. பிரான்ஸ் நாட்டிற்கான இந்திய துணைத் தூதர் லிஸ் டரல்வபரட் பரர்வரா, புதுச்சேரி அரசின் சார்பில் ஆட்சியர் வல்லவன் உள்ளிட்ட பிரெஞ்சு தூதரக அதிகாரிகள் மற்றும் முன்னாள் பிரெஞ்சு ராணுவ அதிகாரிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் பிரெஞ்சு முன்னாள் ராணுவ வீரர்கள், புதுச்சேரியில் வாழும் பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியில் இந்திய மற்றும் பிரான்சின் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
Next Story