இறுதிக்கட்ட வாக்குப்பதிவு... உச்சகட்ட பரபரப்பில் ஜம்மு-காஷ்மீர்
#jammukashmir | #election2024
இறுதிக்கட்ட வாக்குப்பதிவு... உச்சகட்ட பரபரப்பில் ஜம்மு-காஷ்மீர்
ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலில் 3வது மற்றும் இறுதிக்கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.
ஜம்மு-காஷ்மீரில் மொத்தமுள்ள 90 சட்டமன்றத் தொகுதிகளுக்கு மூன்று கட்ட தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதுவரை இரண்டு கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், எஞ்சிய 40 தொகுதிகளில் 3வது மற்றும் இறுதிக்கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி, மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. ஜம்மு, உத்தம்பூர், சம்பா, கதுவா உள்ளிட்ட பகுதிகளிலும், வடக்கு காஷ்மீரில் உள்ள பாரமுல்லா, பந்திபோரா, குப்வாரா ஆகிய பகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 5 ஆயிரத்து 60 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், சுமார் 39 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். முன்னாள் துணை முதல்வர்கள் தாராசந்த், முஸாபர் உசேன் உட்பட 415 வேட்பாளர்கள், 3-ம் கட்ட தேர்தலில் களம்காண்கின்றனர். 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள், தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனிடையே, ஜனநாயக முற்போக்கு ஆசாத் கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், ஜம்முவில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 10 ஆண்டுகளுக்குப்பின் தேர்தல் நடைபெறும் நிலையில், வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டுமென தெரிவித்தார்.