செல்ல நாய்களிடையே சண்டை...உரிமையாளர்கள் வாக்கு வாதம்
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் வளர்ப்பு நாய் தொடர்பான பிரச்சினையில் இருவரை பாதுகாவலர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...
மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் உள்ள கிருஷ்ணா பாக் காலனி என்னும் பகுதியில் தனியார் வங்கியில் பாதுகாவலராக பணியாற்றி வரும் ராஜ்பால் ரஜாவாத் என்ற நபரும் அவரது பக்கத்து வீட்டுக்காரரும் தங்கள் நாயுடன் நடை பயிற்சி சென்ற போது நாய்கள் இரண்டும் சண்டையிட்டுக் கொண்டன. இதனால் நாயின் உரிமையாளர்களுக்கு இடையே சண்டை வந்துள்ளது. இதை அங்கிருந்த மக்கள் வேடிக்கை பார்த்துள்ளனர். வாக்குவாதத்தின் போது வீட்டின் உள்ளே சென்ற ரஜாவத் தனது துப்பாக்கியை வெளியே எடுத்து வந்து அங்கு திரண்டு நின்றவர்களை நோக்கி சுட்டார். இதில் சம்பவ இடத்திலேயே 28 வயதான ராகுல் மற்றும் 35 வயதான விமல் ஆகிய 2 இளைஞர்கள் பலியான நிலையில், மேலும் 8 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ராஜ் பால் ரஜாவாத்தை கைது செய்துள்ள காவல் துறையினர் அவரிடமிருந்து துப்பாக்கியையும் பறிமுதல் செய்துள்ளனர்.