பெண் நீதிபதி தூக்கிட்டுத் த*கொலை | uttarpradesh
உத்தரப்பிரதேசத்தில் பெண் நீதிபதி ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். உத்தரப்பிரதேச மாநிலம் படானில், இளநிலை சிவில் நீதிபதி ஜோத்ஸ்னா ராய், தனது இல்லத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். ஜோத்ஸ்னா ராய், முதலாவது தளத்தில் தங்கிய நிலையில், அவரது அறை திறக்கப்படாததால் சந்தேகமடைந்த உறவினர்கள், அதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் அங்கு வந்த போலீசார் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்தில் கைரேகை நிபுணர்கள் ஆய்வு செய்தனர்.
Next Story