படுத்த படுக்கையான அப்பா.. வீட்டில் தவிக்க விட்டு மகன் ஓட்டம் - 2 நாள் ஊசலாடிய உயிர்..நெஞ்சை ரணமாக்கும் சம்பவம்..

x

எர்ணாகுளம் அருகே வைற்றிலா பகுதியை சார்ந்தவர் சண்முகன். 70 வயதான இவர், சில மாதங்களுக்கு முன்பு விபத்தில் சிக்கி உடல்நிலை பாதிக்கப்பட்டார். இதனால், வாடகை வீட்டில் படுத்த படுக்கையாக இருந்தார். இந்நிலையில், சண்முகனை வீட்டில் அனாதையாக விட்டுவிட்டு, பொருட்களை எல்லாம் எடுத்துக்கொண்டு, அவரது மகன் அஜித் வெளியூருக்கு குடிபெயர்ந்தார். பூட்டப்பட்ட வீட்டில் 2 நாட்களாக படுத்த படுக்கையில் அவதிப்பட்ட சண்முகனை, வீட்டின் உரிமையாளர் பார்த்து அதிர்ச்சியடைந்தார். புகார் அடிப்படையில், சண்முகனை மீட்ட காவல்துறையினர், அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தனர். தந்தையை அனாதையாக விட்டுவிட்டு சென்ற மகன் அஜித் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்