மாணவியின் தோழிகளை ஏமாற்றி தந்தை செய்த பகீர் காரியம் - ஜிப்மர் சென்றவர்களுக்கு காத்திருந்த ஷாக்

x

மாணவியின் தோழிகளை ஏமாற்றி தந்தை செய்த பகீர் காரியம் - ஜிப்மர் சென்றவர்களுக்கு காத்திருந்த ஷாக்

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் வேலை வாங்கித் தருவதாக கூறி, பல லட்ச ரூபாய் மோசடி செய்து விட்டதாக பெண் உள்பட 3 பேர் மீது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுத்துள்ளனர்.காரைக்காலில் உள்ள தனியார் செவிலியர் பயிற்சி கல்லூரியில் படிக்கும் நிஷா என்பவரின் தந்தை நீலமேகம், அதே கல்லூரியில் படிக்கும் சில மாணவிகளுக்கு ஜிப்மரில் வேலை வாங்கித் தருவதாக கூறி பணம் வசூலித்ததாக கூறப்படுகிறது. நீலமேகமும், திருநள்ளார் பகுதியைச் சேர்ந்த காயத்ரியும் சேர்ந்து, புதுச்சேரியைச் சேர்ந்த ஜானகிராமன் என்பவர் மூலமாக வேலை வாங்கித் தருவதாக கூறி பணம் வசூலித்துள்ளனர். சில மாதங்களுக்குப் பிறகு, வேலை தொடர்பாக டெல்லியில் பேசி வருவதாக கூறிய ஜானகிராமன், பின்னர், ஜிப்மர் பெயரில் பணி நியமன ஆணை, ஐடி அடையாள அட்டை ஆகியவற்றை மாணவிகளிடம் கொடுத்தனுப்பி நான் சொல்லும்போது பணியில் சேரலாம் என்று கூறியுள்ளார். பல நாட்கள் பொறுத்திருந்த மாணவிகள், ஜிப்மருக்கு நேரில் சென்று பணி நியமன ஆணையை காண்பித்தபோது, அவை போலியானவை எனத் தெரியவந்து அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து, பாதிக்கப்பட்ட மாணவிகள், நீலமேகத்தையும், காய்திரியையும் சந்தித்து கேட்டபோது, வேலை பெற்று தருவோம் அல்லது பணத்தை திருப்பித் தந்து விடுகிறோம் என்று கூறி சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளார். பணமும் வேலையும் கிடைக்காத நிலையில், நீலமேகம், காயத்ரி, ஜானகிராமன் ஆகிய 3 பேர் மீதும் காரைக்கால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்