"பிடி கொடுக்காத மத்திய அரசு..!"மீண்டும் டெல்லி நோக்கி பேரணி.. விவசாயிகள் அதிரடி அறிவிப்பு

x

சண்டிகரில் கடந்த ஞாயிற்றுக் கிழமை மத்திய அமைச்சர்களும், விவசாயிகள் சங்கத்தினரும் நான்காம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, குறைந்த பட்ச ஆதரவு விலைக்கு மத்திய அரசு தரப்பில் சில பரிந்துரைகள் வழங்கப்பட்டது. இவை குறித்து ஆலோசனை நடத்திய விவசாயிகள் சங்கத்தினர், பரிந்துரைகளை நிராகரிப்பதாக அறிவித்துள்ளனர். பாமாயிலை இறக்குமதி செய்யும் பணத்தை விவசாயிகளிடம் கொடுத்து, எண்ணெய் வித்துக்களை பயிரிட வைத்து, குறைந்த பட்ச ஆதரவு விலை நிர்ணயித்தால், அந்த பணம் உள்நாட்டிலேயே பயன்படும் என்று விவசாயிகள் தெரிவித்தனர். ஆனால், பரிந்துரைகள் அனைத்தும் விவசாயிகளுக்கு சாதகமாக இல்லை என்ற விவசாயிகள், அவற்றை முற்றிலும் நிராகரிப்பதாக கூறினர். குறைந்த பட்ச ஆதரவு விலையை அறிவிக்காவிட்டால், திட்டமிட்டபடி நாளை காலை 11 மணிக்கு டெல்லி நோக்கி பேரணி தொடங்கும் என்றும் விவசாயிகள் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்