பிரபல Food Vlogger திடீர் மரணம்... அதிர்ச்சியில் ரசிகர்கள் | Kerala

x

கொச்சியை சேர்ந்த உணவுப் பதிவாளர் ராகுல் என்.குட்டி, கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் புகழ்பெற்ற இன்ஸ்டகிராம் பக்கமான 'ஈட் கொச்சி ஈட்' வீடியோக்கள் மூலம் உணவுப் பிரியர்களுக்கு பரிச்சயமான நபராக இருந்து வந்தார். உணவு பிரியர்களையும், சமூகங்களையும் ஒன்றிணைக்கும் ஒரு முயற்சியாக, சமையல் கலாச்சாரத்தின் உறுப்பினராகவும் ராகுல் இருந்தார். இறுதியாக கடந்த புதன் கிழமை அன்று அவர் கடைசியாக பதிவிட்டார். இந்நிலையில், மாதவனத்தில் உள்ள அவரது வீட்டில், தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

அவரது இறப்பு குறித்து இன்ஸ்டாகிராமில் பலரும் தங்கள் இரங்கலை பதிவிட்டுள்ளனர். மறைந்த ராகுல் என்.குட்டிக்கு, மனைவி மற்றும் 2 வயது மகன் உள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்