"போலி.. போலி.." - லட்சங்களை சுருட்டிய கும்பல்
போலியாக கல்வி சான்றிதழ்களை தயாரித்து விற்று வந்த கும்பலை, டெல்லியில் போலீசார் கைது செய்தனர்.
இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு அரசு, தனியார் பல்கலைக்கழகங்கள் மற்றும் மாநில கல்வி வாரியங்களின் போலியான பட்டங்கள் மற்றும் சான்றிதழ்களை தயாரிப்பதில், சிண்டிகேட் ஈடுபட்டுள்ளதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை செய்ததில், போலி சான்றிதழ் தயாரித்து விற்பனை செய்தது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து மோசடியில் ஈடுபட்ட தால் சந்த் மெஹெரோலியா மற்றும் மஹாவீர் குமார் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். சோதனையின்போது 19 போலி மதிப்பெண் பட்டியல்கள் மற்றும் சான்றிதழ்கள், 11 மடிக்கணினிகள், 14 செல்போன்கள், போலி முத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையின் போது, 10ம் வகுப்பு முதல் பிஎச்டி வரை,போலி மதிப்பெண் பட்டியலை வழங்க, 20 ஆயிரம் ரூபாய் முதல் 2 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் வரை வசூலித்து வந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.