கொதிக்க வைத்த இ-ஸ்கூட்டர்... ஊழியர்களின் `நக்கல்' - வயிற்றில் எரிந்த தீயை; ஷோரூமுக்கு வைத்த நபர்

x

புதிதாக வாங்கிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஏற்பட்ட பழுதை சரி செய்யாததால், வாடிக்கையாளர் ஒருவருக்கு ஏற்பட்ட கோபம் நாடு முழுவதும் பேசு பொருளாகி இருக்கிறது இது குறித்துப் பார்க்கலாம் விரிவாக..


குபுகுபுவென கரும்புகைகள் சூழ பிரபல ஓலா இரு சக்கர வாகன விற்பனை ஷோரூம் பற்றி எரிந்து கொண்டிருக்க.. முக்கிய சாலை ஸ்தம்பித்து மக்கள் கூட்டம் திரண்டது. சிறிது நேரத்தில் தீயணைப்புத் துறை வாகன விரைவாக வந்து தீயயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்

தீ விபத்து குறித்து விசாரணை நடத்திய அதிகாரிகளுக்கு வந்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

நடந்தது என்ன..?

கர்நாடக மாநிலம் கல்புர்கி மாவட்டத்தைச் சேர்ந்த முகம்மது நதீம், மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார். கடந்த 20 தினங்களுக்கு முன் ஒன்றறை லட்ச ரூபாயில் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றை வாங்கி இருக்கிறார்.

வாங்கிய நாளில் இருந்தே ஸ்கூட்டர் மக்கர் செய்ய கிட்டதட்ட இருபது முறைக்கு மேல் ஓலா ஷோரூம் சென்று முறையிட்டு இருக்கிறார். ஆனால் ரிப்பேரை சரி செய்து கொடுக்காமல் ஷோரூமில் உள்ள அதிகாரிகள் அலட்சியமாகச் செயல்பட்டதாகக் கூறப்படுகிறது.


இதனால் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற நதீம் பெட்ரோலை வாங்கிக் கொண்டு சம்மந்தப்பட்ட ஷோரூமில் உள்ள ஸ்கூட்டர்கள் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து இருக்கிறார்.

மேலும் ஷோரூம் பற்றி எரிவதையும் அருகில் இருந்தே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.இந்த தீ விபத்தில் ஷோரூமில் இருந்த 8 லட்ச ரூபாய் மதிப்புள்ள 6 ஸ்கூட்டர்கள் முழுவதுமாக எரிந்து சேதமடைந்து உள்ளன. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் முகம்மது நதீமை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்