`டீ' குடிக்க அழைத்து... உயிர் நண்பனை குத்தி கிழித்து கொன்ற வாலிபர்... வெளிவந்த பகீர் பின்னணி

x

காதல் பிரச்சினையால் நண்பரை கத்தியால் குத்திக்கொலை செய்த சக நண்பரை போலீசார் தேடி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் பவானியைச் சேர்ந்த வெல்டர் சேது மணிகண்டன். இவரது நண்பர் குருநாதன். அதிகாலையில் சேது மணிகண்டனை டீ குடிக்க அரசு மருத்துவமனை அருகே குருநாதன் அழைத்துள்ளார். இதனையடுத்து அங்கு சேது மணிகண்டன் சென்றுள்ளார். அப்போது இருவருக்கும் வாய்த் தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறிய நிலையில், குருநாதன் சேது மணிகண்டனை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடியுள்ளார். இதில் சேது மணிகண்டன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த போலீசார் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் இருவரும் ஒரே பெண்ணை காதலித்ததால் தகராறு ஏற்பட்டு கொலை நடந்தது தெரியவந்துள்ளது. தப்பி ஓடிய குருநாதனை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்