ஒரே வாரத்தில் ஒரு லட்சம் பேர்...குவியும் மாணவர்கள்
பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கு மாணவர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்த ஒருவாரத்தில் மட்டும், ஒரு லட்சம் பேர் பொறியியல் படிப்புகளில் சேர விண்ணப்பித்துள்ளனர். பொறியியல் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள், கடந்த ஆறாம் தேதி முதல், இணைய வழியில் விண்ணப்பித்து வருகின்றனர். ஞாயிற்றுக்கிழமையுடன் இதுவரை 1 லட்சத்து 699 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இவர்களில்,27,755 மாணவர்கள் தங்களின் சான்றிதழ்களை முழுமையாக பதிவேற்றம் செய்திருக்கின்றனர். பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க, அடுத்த மாதம் 6-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
Next Story