திடீர் திருப்பமாக அமைந்த ஜாபர் சாதிக் வழக்கு.. Email-ல் சிக்கிய ஆவணம்..கூட்டாளிக்கு ஒலித்த அபாய ஒலி
போதை பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஜாபர் சாதிக்கை என்சிபி அதிகாரிகள் ஏழு நாள்கள் நீதி மன்ற காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், அவரது கூட்டாளி சதாவை கைது செய்த போலீசார், தொடர்ந்து ஜாபர் சாதிக்கிற்கு சொந்தமான குடோனுக்கும் சீல் வைத்தனர். இந்நிலையில், ஜாபர் சாதிக்கின் நீதிமன்ற காவல் முடிவடைந்ததை ஒட்டி பாட்டியாலா நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது ஜாபர் சாதிக்கிடம் இருந்து பறிமுதல் செய்யபட்ட 7 செல்போன்களில் ஏராளமான தகவல்கள் இருப்பதாகவும், இந்த வழக்கின் குற்றவாளியான முஜிபுர் ரஹ்மான் என்பவருடன் இ-மெயில் மூலம் ஜாபர் சாதிக் அடிக்கடி பேசிஇருப்பதால் அவரிடம் மேலும் விசாரணை நடத்த வேண்டும் என நீதிமன்றத்தில் என்சிபி கோரிக்கை வைத்தது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி மேலும் மூன்று நாட்களுக்கு ஜாபர் சாதிக்கை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.