100 நாள் வேலை திட்ட கூலி உயர்வு தேர்தல் நடத்தை விதிமீறலா? - வெளியான முக்கிய தகவல்

x

100 நாள் வேலை வாய்ப்பு திட்ட கூலி உயர்வு தேர்தல் நடத்தை விதி மீறலா? என்ற கேள்வி எழுந்துள்ளது. மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கான கூலியை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், மத்திய அரசு இந்த கூலியை உயர்த்தியுள்ளது, தேர்தல் நடத்தை விதி மீறலா என கேள்வி எழுந்துள்ளது. 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்திற்கான கூலி உயர்வு என்பது ஒவ்வொரு ஆண்டும் வழக்கமாக மேற்கொள்ளப்படும் நடைமுறை என்றும் கூறப்படுகிறது. தேர்தல் ஆணையத்திற்கு முன்பே தகவல் தெரிவித்து அனுமதி பெற்ற பின்னரே, மத்திய அரசு இந்த அரசாணையை வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்