தேர்தல் 2024.. `இன்றே' கடைசி | Election 2024 | Campaign | 7th Phase

x

18-வது மக்களவை பொதுத்தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில், முதற்கட்ட தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கியது. இதுவரை ஆறு கட்டமாக தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், ஏழாவது மற்றும் கடைசி கட்ட தேர்தல் வருகிற ஜூன் ஒன்றாம் தேதி 57 தொகுதிகளில் நடைபெறுகிறது. இதற்கான பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடையும் நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஒடிசா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் பொதுக்கூட்டங்களில் பங்கேற்கிறார். காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி இமாச்சல் பிரதேச மாநிலம் சோலன் பகுதியில் வாகன பேரணியில் பங்கேற்கிறார். மக்களவை தேர்தலுக்கான முடிவுகள் ஜூன் 4ஆம் தேதி வெளியாக உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்